ரோஹிங்கிய முஸ்லிம் குடும்பத்தினர் 5 பேர் கேரளாவில் கைது

By ஏஎன்ஐ

ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் வந்த ரோஹிங்கிய குடும்பத்தினர் 5 பேரைக் கேரளக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆரம்பகட்ட விசாரணையில் வெளியான தகவலில், ரோஹிங்கிய முஸ்லிம் குடும்பத்தினர் 5 பேர் திங்கட்கிழமை அன்று இரவு ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளனர். ரயில் நிலையத்திலேயே இரவைக் கழித்த அவர்கள், ரிக்‌ஷாவில் விழிஞ்சம் பகுதிக்குப் பயணித்துள்ளனர். அங்கே வாடகைக்கு வீடு தேடிய அவர்கள், அருகில் இருந்த மசூதிக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் சாயுப் (36), அவரின் மனைவி சாஃபியா கத்தும் (29), சாயுபின் சகோதரர் இர்ஷாத் (27), சாஃபியாவின் சகோதரர் அன்வர் ஷா (11) மற்றும் சாஃபியாவின் 6 மாதக் குழந்தை சாஃபியன் ஆகியோர் என்று தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து ஐ.நா. அகதிகளுக்கான அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்கள் தப்பி, வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். வங்கதேசம் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ஏராளமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ரோஹிங்கிய அகதிகள் தங்களின் குடும்பத்துடன் கேரளாவுக்கு வர உள்ளதாக ஆர்பிஎப், கேரள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.

மியான்மரில் இருந்து வட கிழக்கு மாநிலங்கள் வழியாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் வர உள்ள 14 ரயில்களின் பட்டியலையும் ஆர்பிஎப் அளித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்