பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா நேற்று ஒஷிவாரா காவல் நிலையத்தில் சக நடிகர் நானா படேகருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யும்படி புகார் ஒன்றை அளித்தார். 2008ல் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பின்போது நானா படேகர் தன்னிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை காவல்துறை செய்தித் தொடர்பாளர் டிசிபி மஞ்சுநாத் சிங்கே இதுகுறித்து தெரிவிக்கையில். ''பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ புகார் அளித்தது உண்மைதான். ஆனால் இன்னும் படேகர் மீது எப்ஐஆர் வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. இப்பிரச்சினையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன'' என்றார்.
இதுகுறித்து ஒஷிவாரா காவல்நிலைய போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ''நடிகை தனுஸ்ரீ சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு காவல்நிலையம் வந்தார். அவருடைய வழக்கறிஞரும் வந்திருந்தார். நானா படேகர் தவிர, திரைப்பட நடன இயக்குநர் கணேஷ் ஆச்சாரியா, இயக்குநர் ராகேஷ் சாரங் மற்றும் தயாரிப்பாளர் சமீ சித்திக்கி ஆகியோருக்கு எதிராகவும் கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு அவர் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டார். சித்திகி சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் தன்னைப் பற்றி மிகவும் மோசமாக பேசியதாக அவர் தெரிவித்திருந்தார்.
2008ஆம் ஆண்டில் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எவ்வாறு பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் மனுவில் விவரமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவம் நடைபெற்ற அதே ஆண்டில் இது குறித்த குற்றச்சாட்டுக்களைத் தெரிவிக்க முனைந்தபோது தொடர்புடைய திரைப்பட முக்கியஸ்தர்கள் தன் தரப்பு நியாயத்தை எவ்வாறு அவர்கள் நிராகரித்தனர் என்பதையும் இதில் தனுஸ்ரீ குறிப்பிட்டுள்ளார். பாடல் காட்சியின்போது நடிகர் நானா படேகர், ஒரு பெண்ணான தன்னை மோசமான அளவுக்கு கேவலப்படுத்திய வகையில் அவர் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாடல் காட்சியில் மேலும் பங்கேற்க இயலாமல் தான் ஓய்வெடுக்கும் வாகனத்தில் வந்து அமர்ந்தபோது, வெளியே மகாராஷ்டிரா மாநிலத்தின் நவநிர்மாண் சேனா கட்சியின் தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு கோஷமிட்டனர். பின்னர் காவலர்கள் வந்து மீட்டு கோரேகான் காவல்நிலையத்திற்கு கொண்டுசென்று தனது புகார் வாக்குமூலத்தை பதிவு செய்ததனர். அதில் பல பகுதிகள் நீக்கப்பட்டதாகவும் அப்புகாரின் அடிப்படையிலான முக்கிய குற்றவாளியின்மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் அவர் சுதந்திரமாக நடமாடி வருவதாகவும் தனுஸ்ரீ தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
படேகர், ஆச்சார்யா, சித்திகி, சரங் மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சிக்காரர்கள் சிலர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் 354, 354 (A), 509 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்து நடிகை தனுஸ்ரீ தனது மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இவ்வாறு கோரேகான் காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ட்விங்கிள் கன்னா உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலர் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட சிலரும் இரு தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்க இயலாத நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.
தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வரும் தனுஸ்ரீக்கு எதிராக சிலதினங்களுக்கு முன் நானா படேகர் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago