விசாகப்பட்டினம் விமான நிலைத்தில் இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று காலை வெளியேறிய போது கத்தியால் குத்தப்பட்டார்.
ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு இன்று காலை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி விமானம் மூலம் வந்தார். அவரை ஆதரவாளர்கள் வரவேற்று அழைத்து வந்தனர். அப்போது, திடீரென்று அவரின் பின்னால் வந்த ஒருவர் திடீரென கூர்மையான பொருளால் ஜெகன்மோகன் ரெட்டியின் இடது தோள்பட்டை அருகே குத்தினார்.
இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் கையில் இருந்து ரத்தம் வெளியேறியது. இதைப் பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பும் முன், அங்கிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து அடித்து, போலீஸிடம் ஒப்படைத்தனர். ரத்தம் அதிகமாக வெளியேறியதால், விமான நிலையத்தில் இருந்து உடனடியாக ஜெகன் மோகன் ரெட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜெகன்மோகன் ரெட்டியை கத்தியால் குத்திய நபரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் சீனிவாஸ் என்பது, விமான நிலைய ஹோட்டல் ஒன்றில் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார். ஜெகன்மோகன் ரெட்டியுடன் செல்பி எடுக்க முயன்றேன் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து முன்னுக்குப்பின் தகவல்களை அந்த நபர் தெரிவித்தால், அவரை போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய கட்சிகளின் ஒன்றான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சின் தலைவர் தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பாதுகாப்பு கவனக்குறைவு என்று அந்தக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். விமானநிலையம் அனைத்துக்கும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு அளிக்கும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், ‘‘ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடத்தப்பட்ட இந்தக் கோழைத்தனமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன். மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாகும். எவ்வாறு ஒருவர் விமானநிலையத்துக்குள் கத்தியை எடுத்துவர முடியும். செல்பி எடுக்கும் கலாச்சாரத்தால், அரசியல்தலைவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago