சபரிமலை ஐயப்பன் கோயி லுக்கு நேற்று மேலும் ஒரு பெண் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த அவர் தனக்கு 52 வயதாகிறது என வயது சான்றிதழை காட்டியதால் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல லாம் என உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது. தீர்ப்பை எதிர்ப்பவர் கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலை யில் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை 17-ம் தேதி திறக்கப்பட்டது.
அப்போது சபரிமலைக்குச் செல்ல வந்த லிபி, மாதவி, பத் திரிகையாளர்கள் சுஹாசினி, கவிதா, கேரளாவின் ரஹ்னா பாத்திமா, மேரி ஸ்வீட்டி ஆகி யோர் பக்தர்களின் போராட் டத்தால் திருப்பி அனுப்பப்பட்ட னர். இதில் கவிதாவும் ரஹ்னா பாத்திமாவும் நடைப்பந்தல் வரை சென்ற நிலையில், சன்னி தானத்தில் கீழ் சாந்திகளே போராட்டத்தில் குதித்தனர். ஆச்சாரம் மீறப்பட்டால் கோயில் நடையை அடைத்து விட்டு சாவியை தேவசம் போர் டிடம் ஒப்படைப்பேன் என தந்தரி கண்டரரு ராஜீவரரு எச்சரித்தார். இதனால் அவர் களும் திருப்பி அனுப்பப் பட்டனர்.
நிலக்கல், பம்பை, சன்னி தானம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு இருக்கும் நிலையில், பாஜக நிர்வாகிகள் ஏ.என்.ராதாகிருஷ்ணன், பத்ம குமார் ஆகியோர் தலைமை யில் பம்பையில் பாஜகவினர் நேற்று காலை திரண்டனர். அவர்கள் வெள்ளை சட்டை களின் மீது கருப்பு துண்டு போட்டிருந்ததால் ஐயப்ப பக்தர்கள் என்று போலீஸார் மெத்தனமாக இருந்தனர். அதன் பின்னரே பாஜகவினர் கூடியுள்ளனர் எனத் தெரிந்து 8 பேரை கைது செய்தனர்.
சிறையில் உண்ணாவிரதம்
சபரிமலை விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஐயப்ப பக்தர்களை திரட்டி போராட்டத் துக்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவர் ராகுல் ஈஸ்வர். சபரிமலை தந்தரியாக இருந்த கண்டரரு மகேஸ்வரருவின் பேரனான இவர் சபரிமலையில் நடை திறந்த அன்று, பம்பை விநாயகர் கோயில் அருகே ‘‘சரண கோஷம்” போராட்டம் நடத்தினார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.
பத்தனம்திட்டா நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து கொட்டாரக்கரை கிளை சிறையில் அடைக்கப் பட்டார். அவர் மீது ஆந்திரா வைச் சேர்ந்த மாதவியை சன்னிதானத்துக்கு செல்ல விடாமல் தடுத்ததாகவும் போலீ ஸாரை பணி செய்யவிட வில்லை எனவும் பொய் வழக்கு போட்டிருப்பதாக ராகுல் ஈஸ்வரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், சபரிமலை யில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து சிறைக்குள் அவர் உண்ணாவிரதப் போராட் டத்தை நடத்தி வருவதாக அவ ரது குடும்பத்தினர் நேற்று தெரி வித்தனர். தொடர் உண்ணா விரதத்தில் இருக்கும் அவர் திருவனந்தபுரம் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட லாம் என தகவல்கள் வெளி யாகி உள்ளன.
இதனிடையே அவருக்கு ஜாமீன் கேட்டு அவரது குடும் பத்தினர் பத்தனம்திட்டா நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான மறுவிசாரணை திங்கள்கிழமை வருகிறது.
திருச்சி பெண் லதா
சன்னிதானத்தில் நேற்று காலையில் பதினெட்டாம் படியை நோக்கி ஒரு தம்பதி யினர் வந்தனர். அந்த பெண் குறைந்த வயதுடையவர் போல் இருந்ததால் அவரை பக்தர்கள் சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. அவர் திருச்சியைச் சேர்ந்த லதா எனவும் தனக்கு 52 வயது ஆவ தாகவும் தெரிவித்தார். இத னைத் தொடர்ந்து அவர் தனது வயதை நிரூபிக்கும் வகை யில், ஆதார் அட்டை உள் ளிட்ட ஆவணங்களைக் காண் பித்தார். அதன் பின்னரே பக் தர்கள் அவரை தரிசனத்துக்கு அனுமதித்தனர்.
இதனிடையில் கேரள பொதுப்பணித்துறை அமைச் சர் சுதாகரன் கூறும்போது, ‘‘சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு கடையை பூட்டுவது போல் சபரிமலை நடையை பூட்டுவோம் என்று கூறியுள் ளார்" எனத் விமர்சித்தார்.
கேரள பெண் மஞ்சு
இதனிடையே கேரள மாநி லம் கொல்லம் சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சு (38), மேலும் ஒரு பெண் ஆகியோர் நேற்று சபரிமலைக்குச் செல்ல வந்தனர். பம்பை பகுதியில் முகாமிட்டுள்ள ஐஜி ஜித், அவர்களிடம் ஐயப்ப பக்தர் களின் போராட்டம் குறித்தும் அங்குள்ள சிக்கல்கள் குறித் தும் விளக்கிச் சொன்னார். இதையடுத்து, ஒரு பெண் மட்டும் திரும்பிச் சென்றார். ஆனால் கேரளா தலித் மகளிர் அமைப்பின் பொதுச் செயலாளராக உள்ள மஞ்சு சபரிமலைக்குச் செல்வதில் உறுதியுடன் இருந்தார்.
சபரிமலைக்கு வரும் பெண்களின் பின்னணி குறித்து விசாரித்த பின்னரே மலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என போலீஸார் அவரிடம் தெரிவித் தனர். மஞ்சு மீது கேரளாவின் பல்வேறு காவல் நிலையங் களில் 15 வழக்குகள் நிலுவை யில் இருப்பதாகக் கூறப்படு கிறது. இதனிடையில் பம்பை, சன்னிதானம் பகுதிகளில் கன மழை தொடங்கிய தால் நேற்று மலை ஏற மஞ்சு அனுமதிக் கப்படவில்லை. இன்று காலை வரை தரிசனம் செய்யும் அள வுக்கு பக்தர்கள் மலையில் இருப்பதாகவும் போலீஸார் அவரிடம் தெரிவித்தனர். வழக் கின் தன்மையை பொறுத்து மஞ்சு இன்று அனுமதிக்கப் படுவாரா என்பது தெரியவரும்.
சபரிமலைக்கு செல்ல அடுத்தடுத்து இளம்பெண்கள் வந்து கொண்டிருப்பதால் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கேரளாவில் காலியாக வுள்ள மஞ்சேஸ்வரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது. இதில் பாஜக போட்டியிட தயாராகி வரு கிறது. இப்போது சபரிமலை விவகாரம் மஞ்சேஸ்வரம் தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
16 hours ago