திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நேற்று காலை, சூரிய பிரபை வாகனத்தில் உற்சவரான மலையப்ப சுவாமி, 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வாகன சேவைக்கு முன், காளை, குதிரை, யானை ஆகிய பரிவட்டங்கள் செல்ல, அவைகளை தொடர்ந்து ஜீயர் சுவாமிகளின் குழுவினர் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை பாராயணம் செய்தவாறு பின்னால் செல்ல, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடன குழுவினர் நடனமாடியபடி வாகன சேவையில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, மாலை ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், இரவு சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 8-ம் நாளான இன்று தங்க தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இன்று இரவு, அஸ்வ (குதிரை) வாகனத்தில் உற்சவரான மலையப்பர் எழுந்தருள உள்ளார்.
நாளை 18-ம் தேதி காலை, கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago