உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள அரசு தீவிரம்; சபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி

By என்.சுவாமிநாதன்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இளம் வயது பெண்கள் செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வலுத்துள்ளது. இத னிடையே, நேற்று கோயிலுக்கு வந்த பெண்களை தடுத்ததுடன் கல்வீச்சில் ஈடுபட்ட போராட்டக்காரர் கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித் தது. இதை அமல்படுத்தப் போவ தாக இடதுசாரிகள் தலைமை யிலான கேரள அரசு அறிவித்தது. இதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கும்போது பெண்கள் அனு மதிக்கப்படுவார்கள் என்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறி வித்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், கோயில் தந்திரிகள், இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்து வோம் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே தீர்ப்பை எதிர்த்து நாயர் சர்வீஸ் சொசைட்டி (என்எஸ்எஸ்) உள்ளிட்ட சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன.

கோயில் நடை திறப்பு

ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனிடையே, செய்தி சேகரிப்பதற்காக தேசிய அளவிலான ஊடகங்கள் நிலக்கல், பம்பையில் முகாமிட் டுள்ளன. அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி சேனல்கள் நேரலையாக ஒளிபரப்பி வருகின்றன. எனினும், இணைய தளம், தொலைபேசி சேவை உள் ளிட்டவை இப்பகுதிகளில் இயங்க வில்லை.

கல்வீச்சில் 2 போலீஸார் காயம்

சபரிமலைக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படும் நிலக்கல் பகுதியில் திரளாக நின்ற ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்த வாகனங்களை சோதனை செய்து, அதில் இளம் பெண்கள் இல்லை என உறுதிப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதித்தனர். சபரிமலை நோக்கி வந்த இரு பெண்களையும் திருப்பி அனுப்பினர். காலையில் போலீஸார் இதைப் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

மாலையில் நடை திறக்கும் நேரத்திலும் இதுபோன்ற செயலில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்களை போலீ ஸார் தடுத்தனர். நிலக்கல் லில் காலையில் 200 போலீஸார் மட்டுமே பாதுகாப்புக்கு நின்றிருந்த நிலையில், மாலையில் 500-க்கும் அதிகமான போலீஸார் குவிக்கப் பட்டனர். வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதிக்க போராட்டக் காரர்களுக்கு தடை விதித்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலக்கல்லில் போலீ ஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

பம்பை விநாயகர் கோயில் அருகே ‘சரண கோஷம்’ போராட் டத்தில் ஈடுபட்டவர்களை பம்பை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக கைது செய்ய சென்ற போது, போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட் டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 2 போலீஸ் வாகனங்கள் சேதம் அடைந்தன. போராட்டக்காரர்களின் கல்வீச்சை தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தினர்.

கல்வீச்சில் ராகுல் ராஜன், பிர வீன் ஆகிய 2 காவலர்கள் காயம் அடைந்தனர். மேலும் போலீஸாரின் தடியடியில் சரோஜம், கொச்சியை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த 4 பேரும் பம்பையில் உள்ள திருவிதாங்கூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத் தப்பட்டுள்ளது. இதற்கான உத் தரவை பத்தனம்திட்டா ஆட்சியர் நூக் பிறப்பித்துள்ளார்.

கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந் திரன் செய்தியாளர்களிடம் கூறும் போது, “நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப் பினர் ஐயப்ப பக்தர்கள் வேடத் தில் பெண்கள், பெண் செய்தி யாளர்கள், அரசு பணியாளர்கள், அரசு பேருந்துகள் மீது தாக்கு தல் நடத்தினர். இது கண்டிக்கத் தக்கது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த ஒத்துழைக்க வேண் டும். புன்னிய பூமியான சபரி மலையை கலவர பூமியாக்க முயற்சிக்கக் கூடாது. உங்கள் அர சியலை வேறு இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்