மத்திய வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயலுக்கு ‘தித்லி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல், நேற்று ஆந்திர-ஒடிஷா கடலோரப் பகுதியை நோக்கி நகர தொடங்கி உள்ளது. வரும் 11ம் தேதி ஆந்திரா - ஒடிஷா எல்லைகளின் கடலோர பகுதிகளை பலத்த சூறாவளி காற்று டன் புயல் தாக்கும் அபாயம் உள்ள தாக மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய வங்க கடலில் நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. இது புயலாக மாறி, வரும் 11-ம் தேதி, ஆந்திரா-ஒடிஷா மாநிலங்களில் கரையோர பகுதியில் கரையை கடக்கும் என புவனேஷ்வரில் உள்ள மத்திய வானிலை மையம் நேற்று இந்த இரு மாநில அரசு களையும் எச்சரித்துள்ளது. இந்த புயலுக்கு ‘தித்லி’ என பெயரிடப் பட்டுள்ளது. நேற்று காலை கிழக்கு மத்திய வங்க கடலில் மையம் கொண்டிருந்த இப்புயல், மெது வாக வடக்கு மற்றும் வட மேற்கு பகுதியில், மணிக்கு சுமார் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்தது. ஆனால், இது மேலும் வலுவடைந்து நேற்று மாலை இப்புயல் ஒடிஷாவின் கோபால்பூருக்கு 560 கி.மீ தொலை விலும், ஆந்திராவின் கலிங்கப் பட்டினத்திற்கு 510 கி.மீ தொலை விலும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறி, ஆந்திரா-ஒடிஷா இடையே வரும் 11-ம் தேதி கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த இரு மாநிலத்திலும் மீன் பிடிக்க யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கடலோர ஆந்திரா மாவட்டங் களில் நேற்று பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இன்னமும் 24 மணி நேரத்துக்கு இப்பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங் களில் தங்க வைக்கும் நடவடிக் கைகளில் ஆந்திர அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கடலோர ஆந்திரா மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. ஒடிஷா மாநிலம், கஞ்சம், கஜபதி, பூரி மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திராவில் காகுளம் மாவட்டத்திலும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
இதன் காரணமாக ஒடிஷாவில் 879 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 300 அவசர படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விடுமுறையில் சென்ற அரசு ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்பு மாறு ஒடிஷா அரசு உத்தர விட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago