தெலுங்கு திரைப்பட நடிகர் சிவாஜி கூறிய ‘ஆபரேஷன் கருடா’ திட்டம், தற்போது ஆந்திர மாநில அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பி வருகிறது. சமீபத்தில் எதிர்கட்சி தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்கு தல் நடத்தப்பட்டதும் கூட, சில மாதங்களுக்கு முன் ‘ஆபரேஷன் கருடா’ திட்டத்தில் சிவாஜி கூறி யவைதான். இவர் கூறியவை எல் லாம் ஒவ்வொன்றாக நடப்பதால், இதுகுறித்து நடிகர் சிவாஜியிடம் விசாரணை நடத்த வேண்டுமென ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் விஜயவாடா போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
நடிகர் சிவாஜி, ‘இத்திட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் தாக்கப்படு வார். இப்பழி ஆளும்கட்சி மீது விழும். இதன்மூலம், ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி ஒரு இக்கட்டான அரசியல் சூழலைச் சந்திக்க நேரிடும்’என குறிப்பிட்டிருந்தார். இதேபோன்று, சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி விசாகப் பட்டினம் விமான நிலையத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை முயற்சிக்கு ஆளானார். இதனைத் தொடர்ந்து, இப்பழி, ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் மீது விழுந்துள்ளது. மேலும், ‘ஒரு நடிகரை, அந்த தேசிய கட்சி வழிநடத்தும்’ என்றும் சிவாஜி கூறியிருந்தார். அவர் கூறியது போன்று, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நட்புடன் பழகிவந்த நடிகர் பவன் கல்யாண், திடீரென தெலுங்கு தேசத்துடன் இருந்த உறவைத் துண்டித்துக் கொண்டு தற்போது அவரை விமர்சித்து வருகிறார்.
நடிகர் சிவாஜி ‘ஆபரேஷன் கருடா’ எனும் பெயரில் சொன்ன தெல்லாம் நடக்கிறது. எனவே, இவருக்கு அனைத்தும் முன் கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்புள் ளது. இதனால், ஜெகன் மீதான கொலை முயற்சியும் இவருக்கு முன்கூட்டியே தெரியும். நடிகர் சிவாஜியை கைது செய்து விசாரித் தால், பல உண்மைகள் வெளிவரும்’ என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் விஜயவாடா காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் மீது நேற்று புகார் அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
44 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago