அமிர்தசரஸ் துயரம்: தண்டவாளத்தில் நிற்க வேண்டாம் என்று 10 முறைக்கும் மேல் எச்சரிக்கை செய்தேன்- அழுத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

By ஏஎன்ஐ

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அமிர்தசரஸ் ரயில் விபத்துக்கு முன்னதாக தண்டவாளத்தில் நிற்க வேண்டாம் என்று 10 முறைக்கும் மேல் பொதுமக்களை எச்சரிக்கை செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை தசரா பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடந்தன. அதன் ஒருபகுதியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு அருகில் உள்ள ஜோதா பதக் என்ற இடத்தில் ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதியதில் 60 பேர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதனால் பொதுமக்களும், பலியானவர்களின் உறவினர்களும் விபத்து நடந்த பகுதியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் கவுன்சிலர் விஜய் மதன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் அவரின் மகனுமான சவ்ரவ் மதன் மிது ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு அமிர்தசரஸில் போராட்டம் வெடித்தது.

சவ்ரவ் மதன் மிது, ரயில் விபத்து நடந்த சில நொடிகளில் தன்னுடைய சொகுசுக் காரில் சம்பவ இடத்திலிருந்து வீட்டுக்கு அவசரம் அவசரமாகச் சென்றதும், நிகழ்ச்சியின் போது ‘500 ரயில்கள் கடந்து போனாலும் ரயில் பாதையில் நிற்கும் 5000 பேர் கலைய மாட்டார்கள்” என்று பேசியதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் மாயமாகினர்.

இவர்கள் மாயமானதால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இவர்கள் வீடுகள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதனிடையே சவ்ரவ் மதன் மிது இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''நிகழ்ச்சிக்காக அனைத்துத் தரப்பிடம் இருந்தும் அனுமதி வாங்கப்பட்டது. ராவணன் பொம்மையை எரிப்பதற்காக பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தி வைத்திருந்தோம். நெருப்பை அணைக்க தண்ணீர்த் தொட்டிகளும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. தண்டவாளத்துக்கு அருகில் நாங்கள் தசராவைக் கொண்டாடவில்லை. எங்களின் தரப்பில் நாங்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை.

தண்டவாளத்தில் நிற்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் 10-க்கும் மேற்பட்ட முறை எச்சரிக்கை செய்தேன். ஆனால் அவர்கள் செவி மடுக்கவில்லை. அவர்களுக்கு இப்படி நடக்கும் என்று தெரியாது. நடந்த சம்பவம் மிகுந்த மன வேதனை அளிக்கிறது. சிலர் வேண்டுமென்றே என்மீது பழி சுமத்துகின்றனர். எங்களின் குடும்பங்கள் அனைத்தும் சோகத்தில் இருக்கின்றன. எங்களுக்கு உதவுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்