வேறு சாதி ஆணை விரும்பினார் என்றுகூறி 18 வயது இளம்பெண்ணை பஞ்சாயத்து சார்பில் மரத்தில் கட்டி வைத்த சம்பவம் பிஹாரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் கிராமம் ஒன்றில் உள்ள 18 வயது இளம்பெண், வேறு சாதி ஆணை விரும்பினார். அவரின் காதலைப் பெற்றோர் எதிர்த்தனர்.
இதனால் தான் விரும்பிய நபருடன் இளம்பெண் சென்றார். அவரைத் தேடிக் கண்டுபிடித்த பெற்றோர், அவரைப் பஞ்சாயத்தில் ஒப்படைத்தனர்.
அப்பெண் கிராமத்தை அவமதித்துவிட்டார் என்று கூறி, பஞ்சாயத்துத் தலைவர்கள் அவரை ஊர்ப் பொதுவில் உள்ள மரத்தில் கட்டிவைத்தனர். இதுவே அவருக்கு வழங்கப்படும் தண்டனை என்று கூறி மணிக்கணக்கில் நிற்கவைத்தனர். அவரின் அருகில் சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர்கள் நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.
இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதில் இளம்பெண் மயக்கடைந்த நிலையில் கட்டிவைக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் ஒருவர் இளம்பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுக்கிறார். பச்சை சட்டை அணிந்த ஒருவர் கையில் குச்சி வைத்திருக்கிறார்.
இதுகுறித்து 'ஏஎன்ஐ' செய்தி நிறுவனத்திடம் பேசிய பெண்ணின் தந்தை, ''அவள் குற்றவாளி என்பதால் கட்டி வைக்கப்பட்டிருக்கிறாள். அவள் வேறு சாதி ஆணுடன் செல்ல விரும்பினாள்'' என்கிறார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் இளம்பெண்ணை மீட்டு, விசாரணை நடத்திவருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago