கள்ளச் சந்தையில் லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை

By என்.மகேஷ் குமார்

ஏழுமலையான் கோயிலில் லட்டு களை கள்ளச்சந்தையில் விற் பனை செய்திருப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

திருமலையில் சர்வ தரிச பக்தர்களுக்கு மானிய விலையில் 2 லட்டுகள் ரூ. 20-க்கும், கூடுதலாக 2 லட்டுகள் ரூ. 50-க்கும் என மொத்தம் 4 லட்டுகள் ரூ. 70-க்கு வழங்கப்படுகிறது. இதில் கடந்த நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது 3 நாட்கள் வரை கம்ப்யூட்டர் சர்வர் சரிவர செயல்படாத காரணத்தால் லட்டு டோக்கன்கள் ஸ்கேன் ஆகவில்லை. இதனால் டோக்கன் களை ஸ்கேன் செய்யாமல் லட்டு வழங்க தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதில் லட்டு டோக்கன்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி அங்கு பணியில் இருந்த தற் காலிக வங்கி ஊழியர்கள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு பிரசாத லட்டுகளை பக்தர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இதன் படி சுமார் 16,000 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான கண்காணிப்பு பிரிவினருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில், நடந்த விசாரணையில் இதுவரை 4 ஆயிரம் லட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக தெரியவந்துள்ளது. மீதமுள்ள 12,000 லட்டுகள் விற்பனை குறித்து தற்போது ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்பதியில் கடந்த நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது பக்தர்களுக்கு 29.30 லட்சம் பிரசாத லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டதாக தேவஸ்தானம் கூறியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்