சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய முயற்சித்தால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்று கேரள மாநிலத்தின் சிவசேனா கட்சி உறுப்பினர் பெரிங்கமாலா அஜி எச்சரித்துள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயதுள்ள பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. நூற்றாண்டுகளாக 10 வயதுமுதல் 50 வயதுடைய பெண்கள் நுழையத் தடை இருந்தநிலையில், இப்போது பெண்களுக்கான தடைவிலக்கி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பெண்கள் மத்தியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 17-ம் தேதி சபரிமலை மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. பெண்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பெண்கள் தரிசனத்துக்கு வந்தால் அவர்கள் பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்யக் கேரள அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம், 17-ம் தேதி பெண்கள் சாமி தரிசனம் செய்ய வந்தால், கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொள்வோம் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து கேரள சிவசேனா கட்சியின் தலைவர் பெரிங்கமலா அஜி திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படுகிறது. பெண்கள் நுழைவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும், பெண்கள் வரக்கூடாது. அவ்வாறு பெண்கள் கோயிலுக்குள் வர முயற்சித்தால், எங்கள் கட்சியில் தற்கொலைப்படையினர் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்வார்கள்.
இதற்காக முதல்கட்டமாக 7 பேர் கொண்ட படை உருவாக்கியுள்ளோம். பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்தால், அந்த 7 பேரும் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்வார்கள். எங்கள் கட்சியின் சார்பில் பெண் உறுப்பினர்களும் பம்பா ஆற்றங்கரைக்கு வருவார்கள், ஆனால், இளம் பெண்கள் சபரிமலைக்குள் அனுமதிக்கப்பட்டால், தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே சபரிமலைக்குச் செல்லும் பெண்களை இரு துண்டுகளாக வெட்ட வேண்டும் என்று கொல்லம்துளசி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சபரிமலை தேவஸம் போர்டின் முன்னாள் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணனும், சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். பெண்கள் சபரிமலைக்கு வரலாம், ஆனால், அவர்கள் புலிகளாலும், மனிதர்களாலும் பிடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்ததும் பிரச்சினையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago