ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், பாப்ளி அணைக்கட்டு விவகாரத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர், தனது ஆதரவாளர்களுடன் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள பாப்ளி அணைக்கட்டை உயர்த்த சந்திரபாபு நாயுடு நேரில் சென்று எதிர்ப்பு தெரிவித்ததோடு, தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தர்மாபூர் நீதிமன்றம் சந்திரபாபு நாயுடு உட்பட 16 பேர்
மீது பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது. இவ்வழக்கில், சந்திரபாபு நாயுடு சார்பில் அவரது வழக்கறிஞர் கடந்த மாதம் ஆஜராகி பிடிவாரண்டை திரும்பப் பெறும்படி நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார். ஆனால்,
இதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, வரும் அக்டோபர் 15-ம் தேதி சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென எச்சரித்தது.
இந்நிலையில், நேற்று நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பாகவும் அமைச்சர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது, சிலர், ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் நீதிமன்றத்திற்கு செல்வோம் என்று கருத்து தெரிவித்தனர். இறுதியில், மீண்டும், வரும் 15-ம் தேதி சந்திரபாபுவுக்கு பதில், அவரது வழக்கறிஞர் ஆஜராவது என தீர்மானிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago