உள்ளீட்டு வரி வரவை திரும்பப் பெறுவதற்கான தமிழக அரசின் மதிப்பு கூட்டு வரி சட்டத்தின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

உள்ளீட்டு வரி வரவை திரும்பப் பெறுவதற்கான கால வரம்பை நிர்ணயம் செய்யும் தமிழக அரசின் மதிப்பு கூட்டு வரிச்சட்டத்தின் பிரிவு 19(11) அரசியலமைப்பு சட்ட ரீதியாக செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் 2006-ம் ஆண்டு மதிப்பு கூட்டு வரிச்சட்டத்தின் பிரிவு 19(11)-ன்படி, ‘‘ஒரு பதிவுபெற்ற வியாபாரி எந்தவொரு மாதத்திலும், எந்தவொரு வரிவிதிப்புக்குரிய கொள்முதலுக்கும் உள்ளீட்டு வரி வரவைக் கோருவதற்கு தவறி விட்டார் எனில், அவர் அந்த நிதியாண்டின் இறுதிக்குள்ளா கவோ அல்லது அந்தப் பொருளை கொள்முதல் செய்த 90 நாட் களுக்குள்ளாகவோ, இதில் எது பின்னால் வருகிறதோ அந்த கால வரம்பிற்குள் மட்டுமே அவரால் உள்ளீட்டு வரி வரவை திரும்பக் கோர முடியும்’’ என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவைக் காரணம் காட்டி உள்ளீட்டு வரி வரவை தர முடியாது என வணிகவரித் துறையி னர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தரப் பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப் பட்டன.

அதில், ‘‘உள்ளீட்டு வரி வரவைப் பெற வியாபாரிகளுக்கு சட்ட ரீதியாக முழுஉரிமை உள்ளது. இதற்கு எந்த கால நிர்ணயமும் செய்யக்கூடாது. மேலும் தமிழக அரசின் மதிப்பு கூட்டு வரிச்சட்டத் தின் பிரிவு 19(11) அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. எனவே உள்ளீட்டு வரி வரவைப் பெறுவதற்கு காலவரம்பை நிர்ண யம் செய்யும் தமிழக அரசின் மதிப்பு கூட்டுவரிச் சட்டப்பிரிவு 19(11) செல்லாது என அறிவித்து உள்ளீட்டு வரி வரவை திரும்ப வழங்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தனர். இந்த மனுக் களை ஒன்றாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2013-ல் இந்த சட்டப்பிரிவு சட்டப்படியாக செல்லும் எனக்கூறி வியாபாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து வியாபாரி கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர் வில் நடந்தது. அப்போது மனு தாரர்கள் தரப்பி்ல், ‘‘ தமிழக அரசின் மதிப்பு கூட்டு வரிச்சட்டத்தின் பிரிவு 19(11) என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14 மற்றும் பிரிவு 19(1)(ஜி) ஆகியவற்றிற்கு எதிரானது. நடைமுறை ஏற்பாட்டிற்காக கொண்டு வரப்பட்ட இந்தப்பிரிவை கட்டாயப்படுத்த முடியாது. எனவே இந்தப்பிரிவு சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது.

ஆனால் இதற்கு தமிழக அரசு தரப்பில், ‘‘உள்ளீட்டு வரி வரவைப் பெற இந்த சட்டப்பிரிவு நியாயமான நிபந்தனைகளைத்தான் கொண் டுள்ளது’’ என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இதுதொடர் பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பில் எந்த வொரு பிழையும் இல்லை. எனவே உள்ளீட்டு வரி வரவை திரும்பப் பெறுவதற்கான காலவரம்பை நிர்ணயிக்கும் தமிழக அரசின் மதிப்பு கூட்டு வரிச்சட்டத்தின் பிரிவு 19(11) அரசியலமைப்பு சட்ட ரீதியாக செல்லும்’’ என உத்தரவிட்டு மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய் தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்