திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இதில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவரான மலையப்பர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில், நேற்றிரவு முக்கிய வாகன சேவையான கருட சேவை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
முன்னதாக, பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று காலை மோகினி அவதாரத்தில் மலையப்பர் மற்றும் கிருஷ்ணர், தனித்தனியாக பல்லக்குகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு, கருட வாகனத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி, 4 மாட வீதிகளிலும் நேற்று மதியம் முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். கருட சேவை நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கியது. நேற்று நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்ற கருட சேவையில், குதிரை, காளை, யானை போன்ற பரிவட்டங்கள் முன்னால் செல்ல, ஜீயர் குழுவினர் நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களைப் பாடியவாறு மாட வீதிகளில் சென்றனர்.
5 மணி நேரம் நடைபெற்ற வாகன சேவையில் சுமார் 3 லட்சம் பக்தர் கள் சுவாமியை தரிசித்தனர். கருட சேவையை முன்னிட்டு சுவாமியை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு தேவஸ் தானத்தினர் மாட வீதிகளில் மதிய உணவு, குடிநீர், சிற்றுண்டி போன்ற வற்றை வழங்கினர். திருப்பதியி லிருந்து திருமலைக்கு ஒரு நிமிடத் திற்கு ஒரு பஸ் வீதம் இயக்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 3,000 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago