திகார் சிறை நெருக்கடியை சமாளிக்க டெல்லியில் 3 புதிய சிறை வளாகங்கள்

டெல்லியில் உள்ள திகார் சிறை யின் நெருக்கடியை சமாளிக்க புதிதாக 3 சிறை வளாகம் கட்டும் பணி தொடங்கி உள்ளது.

திகார் சிறை தெற்காசியா விலேயே மிகப்பெரிய சிறையாக கருதப்படுகிறது. இதில் அனுமதிக் கப்பட்ட சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 6,250. ஆனால் தற்போது 13,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

திகார் சிறை கட்டுப்பாட்டில் வரும் ரோஹினி சிறையில் மட்டும் 2,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். திகார் சிறை வளாகத்தில் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மூன்று புதிய சிறை வளாகங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து திகார் சிறை வளாக மக்கள் தொடர்பு அலுவலர் சுனில் குப்தா கூறியதாவது: திகார் சிறை நெருக்கடியை சமாளிக்க, மண்டோலி, நரோலா, பாப்ரோலா ஆகிய மூன்று இடங்களில் புதிய சிறை வளாகங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்டோலி சிறை வளாகம் கட்டும் பணி தொடங்கி விட்டது.

இப்பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து விடும். மற்ற இரண்டு சிறைகளும் அடுத்த ஆண்டில் கட்டி முடிக்கப்படும்.

கிழக்கு டெல்லியில் கட்டப்பட்டு வரும் மண்டோலி சிறையில் 3,776 கைதிகள் தங்கலாம். இச்சிறையில் ஆறு பிரிவுகள் இருக்கும். இந்த சிறை மொத்தம் 68 ஏக்கர் பரப்பில், ரூ.169 கோடி செலவில் அமைகிறது.

மின்சார வயர்கள் எதுவும் வெளியில் தெரியாத வகையில் சிறை வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 604 சிறை அலுவலர்களுக்கான குடியிருப்புகளும் அடங்கும்.

பாப்ரோலாவில் அமைய வுள்ள சிறை 125 ஏக்கர் பரப்ப ளவில் திறந்தவெளி சிறையாக இருக்கும். பாப்ரோலா, நரோலா சிறைகளுக்கான கட்டுமானப் பணிகள் நிர்வாக ஒப்புதல் கிடைத்தவுடன் தொங்கப்படும். இவ்வாறு சுனில் குப்தா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE