ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு; ஆகஸ்ட் 17-ம் தேதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

By எம்.சண்முகம்

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி தொழிற்சாலையை மூடக் கோரி கடந்த மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு தேசிய பசுமைத் தீர்ப் பாயத்தில் விசாரணைக்கு வந்த போது, ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக அலுவலகம் இயங்கிக் கொள்ளலாம். ஆனால், காப்பர் உற்பத்தி செய்யும் பகுதிக்குள் நுழையக் கூடாது. இதை அப் பகுதி மாவட்ட ஆட்சியர் பொறுப் பேற்று உறுதி செய்ய வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நேற்று முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இந்த மனுவை வரும் 17-ம் தேதி விசாரணைக்காக பட்டியலிடும்படி உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை கோரி தமிழக அரசு வாதிட முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு இம் மாதம் 20-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள காப்பர் கழிவுகள் உப்பாறு அருகே கொட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டதையடுத்து இதுகுறித்து மத்திய மாசுக்கட்டுப் பாட்டு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று நேரில் ஆய்வு செய்து, கழிவுகளை எப்படி அகற்றலாம் என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கை மீது 20-ம் தேதி தீர்ப்பாயம் விசாரணை நடத்தவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்