மேற்கு வங்க மாநில மால்டா மாவட்டத்தில் பாஜக-திரிணமூல் ஈடுபட்ட அரசியல் வன்முறையில் 3 வயது சிறுவன் தலையில் துப்பாக்கித் தோட்டா பாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.
மால்டா பஞ்சாயத்து தொடர்பான தகராறில் பாஜக-திரிணமூல் தொண்டர்களிடையே மோதல் வெடிக்க துப்பாக்கிச் சூட்டில் 3 வயது சிறுவன் தலையில் காயம் ஏற்பட்டது. இப்போது மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலையில் தோட்டா பாய்ந்த சிறுவனின் தாயார் புதுல் மோண்டல். இவர் பாஜக சார்பாக நின்று பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் பஞ்சாயத்துப் போர்டுக்கு வாக்களிக்கும் போது இவர் திரிணமூல் பக்கம் பல்டி அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த பாஜகவினர் நேற்று மோண்டல் வீட்டைத் தாக்கியதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
போலீஸ் அறிக்கையின் படி, வியாழக்கிழமை பாஜக தொண்டர்கள் ஆயுதங்களுடன் புதுல் மோண்டல் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து மோண்டலுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது திடீரென துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிகிறது அவரது 3 வயது மகன் அறையில் இருந்துள்ளார். இதனையடுத்து தலையில் தோட்டா பாய்ந்தது, என்று கூறப்பட்டுள்ளது.
இது பாஜகவினரின் வன்முறை என்று திரிணமூல் கூற பாஜகவோ, “இது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல். பணத்துக்காக அவர் திரிணமூல் பக்கம் திடீரென சாய்ந்தார். பணம் வரவில்லை என்றவுடன் சண்டை போட்டுள்ளனர், இதில்தான் பையன் காயமடைந்தார்.
பஞ்சாயத்து வாரிய உருவாக்கச் சமயத்தில் மோண்டலுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர் இதனால் அவர் பல்ட்டி அடித்தார் என்று பாஜக சாடிஉள்ளது.
பாஜக மேற்கு வங்கத் தலைவர், திலிப் கோஷ் கூறும்போது, “பாஜக தொண்டர் இதில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைப்போம். ஆனால் திரிணமூல் வன்முறைகளைக் கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த வாரத்தில் மட்டும் மேற்கு வங்க அரசியல் மோதல்களில் 10 பேர் பலியானதாக போலீஸார் தரப்பு கூறுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago