கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு துயரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநயத்தோடு உதவி புரிந்துவரும் 'அன்போடு கொச்சி' அமைப்போடு இணைவதில் தன்னார்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வெள்ளப்பெருக்கினால் வீடற்ற நிலை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் கிராமங்கள், நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பலவகையான உதவிகள் புரிவது மற்றும் உணவு விநியோகம் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்குவது போன்ற பணிகளை செய்வற்கு ஏற்ற வகையில் அன்போடு கொச்சி இயங்கிவருகிறது.
மக்களுக்கு சரியான நேரத்தில் உதவும் வகையில் அன்போடு கொச்சியின் சார்பாக அழைப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 40 குழுக்களைக் கொண்டு இது இயங்கிவருகிறது.
தன்னார்வலர்களின் அழைப்பை ஏற்று தேவைன உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை கொண்டுசேர்க்கும் பணிகளுக்காக மையங்களில் தொலைபேசிகள், லாப்டாப்கள் மூலம் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து அன்போடு கொச்சி உறுப்பினர் கிரிஷ் எஸ்.பிரதீப் தெரிவிக்கையில், ''ஆகஸ்ட் 16 அன்று மூன்று உதவி எண்களோடு இந்த ஹெல்ப்லைனை நாங்கள் தொடங்கினோம். குடிநீர், ஓஆர்எஸ் பாக்கெட்கள், கழிவறை பொருட்கள், பைகள், தூங்குவதற்கான பாய்கள், தயாரான உணவு, ஆடைகள், பாத்திரங்கள் மற்றும் போர்வைகள் ஆகியவை இதன்மூலம் வழங்கப்படுகின்றன.
உதவி கோரவும் உதவிகளை வழங்கவும் மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களின் மூலமாகவே நாங்கள் செயல்படுகிறோம். மாநிலத்தின் வேறுபட்ட ஆறு நகரங்களில் நிவாரணப் பொருட்களை சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப அன்போடு கொச்சியில் இணைந்து பணியாற்ற நாளுக்குநாள் தன்னார்வலர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது'' என்றார்.
பல்வேறு செய்தி ஊடக அறிக்கையின்படி, பல மலையாள நடிகர்களும் நடிகர்களும் எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகத்தின் அன்போடு கொச்சியின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகின்றனர்.
"நாங்கள் மாவட்ட ஆட்சியரை மிக நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளோம், நாங்கள் அழைப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்விதமாக மரியாதைக்குரிய அரசுத் துறைகளுக்கு உரிய செய்திகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்" என்று மற்றொரு உறுப்பினர் நடிகை 'ஊர்வசி' சாரதா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago