சத்தீஸ்கரில் சாலைகளில் மழை வெள்ளம் காரணமாக ஆம்புலன்ஸ் வரவழைக்க முடியாததால் மருத்துவமனையில் சேர்க்கவேண்டிய கர்ப்பிணி பெண்ணை இந்தோ - திபெத் எல்லைப்படை வீரர்களே சுமந்து சென்றனர்.
இதுகுறித்து ஐஆர்பிப்பி போஸ்ட் கமாண்டர் ஏசி.லக்ஷ்மிகாந்த் தெரித்ததாவது:
நகரிலிருந்து வெகு தொலைவு உள்ள மலைகளில் பழங்குடியினர் பகுதிகளில் மருத்துவ வசதி ஏதும் இல்லை. சாலைகளில் மழை வெள்ளம் காரணமாக அங்கு ஆம்புலன்சும் செல்லமுடியாத நிலை.
41வது பட்டாலியனைச் சேர்ந்த கொண்டாகான் பகுதியின் இந்தோ -திபெத் எல்லைக் காவலர்கள், ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஹடேலியில் கர்ப்பிணி பெண் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதைக் கேள்வியுற்றனர். உடனே அவருக்கு முதலுதவி செய்து பின்னர் ஒரு ஸ்ட்ரக்சரில் அவரை சுமந்துவந்தனர்.
ஹடேலி மலைக் கிராமத்திலிருந்து ரணபாலில் உள்ள எங்கள் பாசறை வரை 4 கி.மீ. தொலைவு அவரை சுமந்து வந்து பின்னர். ரணபால் பகுதிக்கு ஆம்புலன்ஸ் வந்தது. பின்னர் அவர் மார்டபாலில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இவ்வாறு லக்ஷிமி காந்த் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago