ஹைதராபாத் நகரின் கூகட்பல்லி பகுதியில் தனியாருக்கு சொந்த மான நியூ செஞ்சுரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமானதால் பழைய கட்டிடத்தில் தற்காலிக கூரை அமைத்து வகுப்பு நடத்தி வந்த தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இங்கு செயல்பட்ட 4-ம் வகுப்பறையின் கூரை நேற்று மதியம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது வகுப்பறையில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்துள்ளனர். கூரை இடிந்து விழுந்ததில் 7 மாணவ, மாணவியர் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் மணி கீர்த்தனா (9), சந்தனா (9) என்ற இரு மாணவிகள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
தொடர்ந்து 2 நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பள்ளியின் பழைய சுவர்கள் நனைந்து இடிந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குள் புகுந்து மேஜை, நாற்காலிகள், கணினிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.
இவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
26 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago