6 ஆயிரம் ரயில் நிலையங்களில் வைஃபை வசதி: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

By ஏஎன்ஐ

நாடு முழுவதும் 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்து தரப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதுகுறித்து ஊடகங்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் மேலும் தெரிவிக்கையில், ''வைஃபை வசதி, ரயில் பயணிகளுக்காக ஏற்படுத்தப்படும். அதேநேரம் அவர்களுக்கு மட்டுமின்றி விவசாயம், கற்பித்தல் போன்ற அவர்களின் தொழில் சம்பந்தமான கூடுதல் தகவலைப் பெறுவதற்கு உதவக்கூடிய வகையிலும் இவ்வசதி செய்து தரப்படும்.

பொதுமக்கள், குறிப்பாக கிராமங்களில் வசிப்பவர்கள், குழந்தைகள், விவசாயிகள், உழைக்கும் பெண்கள் ஆகியோர் ரயில் நிலையங்களில் உள்ள வைஃபை வசதி காரணமாகப் பயனடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.

பயணிகள் விமானங்களில் நிறுவப்பட்டதைப் போலவே, ரயிலிலும் விரைவில் பயோ-ஸ்ட்ரீம் கழிப்பறைகள் பொருத்தப்பட உள்ளன. ரயில்வே துறைக்கான ஹெல்ப்லைன் திட்டங்கள் தற்சமயம் சில தொழில்நுட்ப காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளன. அவை சரி செய்யப்பட்டபின் ஹெல்ப்லைன் திட்டங்கள் நிச்சயம் செயல்படுத்தப்படும்.

இனிமேல் ரயில்வே பாதைகள் முழுவதும் இயந்திரங்களே கண்காணிக்க உள்ளன. பயணிகளின் பாதுகாப்புக்காக இருப்புப் பாதைகளின் மறுசுழற்சி மற்றும் பராமரிப்பு வேலைகளை கவனிக்கும் ஐந்து புதிய கண்காணிப்பு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.''

இவ்வாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்