பெற்றோரை தோளில் சுமந்து செல்லும் ‘நவீன சிரவணன்கள்’

By ஏஎன்ஐ

வயதான தாய், தந்தையரை தோளில் சுமந்து சென்ற ராமாயண கால சிரவணன் போல, ஹரியாணாவைச் சேர்ந்த 4 சகோதரர்கள் தங்கள் பெற்றோரை ஹரித்துவார் யாத்திரைக்கு சுமந்து செல்கின்றனர்.  .

ராமாயணத்தில் சிரவணன் தனது கண் தெரியாத தனது பெற்றோரை சுமந்து சென்ற தகவல் கூறப்படுகிறது. இன்றைய நவீன காலத்திலும், ஹரியாணாவின் பல்வாலிலிருந்து 4 சகோதரர்கள் அதனை பின்பற்றுகின்றனர்.

ஹரித்துவார் கங்கைக் கரை கோயிலுக்கு தாங்கள் மட்டும் சென்றுவந்தால் போதும் என்று அவர்கள் நினைக்கவில்லை. தங்கள் பெற்றோரையும் அழைத்துச் செல்வது, அதுவும் தோளில் சுமந்து மானஸா தேவியின் புனித ஸ்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

அந்த பெற்றோர் தாங்களாகவே நடந்து செல்லக் கூடிய திறன் இருந்தும், நான்குபேரும் அவர்களை தோளில் சுமந்துசெல்வதற்குக் காரணம் உலகிற்கு அன்பும் மரியாதையும் என்றென்றும் முக்கியம் என்ற செய்தியைப் பரப்புவதற்குத்தான்.

இதுகுறித்து அவர்களின் தந்தை கூறுகையில் ‘‘புராணத்தில் வரும் ஷ்ரவண் குமாரின் தாய்தந்தையரைப் போல எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பெற்றோர்களை மதிக்காத பிள்ளைகளுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்பினோம். எங்கள் பிள்ளைகளின் உயர்ந்த அன்பின்மூலம்'' என்றார்.

அவரது மகன்களில் ஒருவரான மகேந்தர் கூறுகையில், ''பெற்றோரின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இந்த பயணம். மேலும், இக்காலத்தில் குழந்தைகள் தங்கள் பெற்றோரை மிகவும் மோசமாக நடத்துகிறார்கள். பிள்ளைகள் தங்களைப் பெற்றவர்களை மரியாதைக்குறைவாக நடத்துவதை அண்டை வீடுகளில் நாம் பார்க்கிறோம்.

எனவே மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் புனித யாத்திரை செல்லும்போது எங்கள் பெற்றோரை சுமந்துசெல்வதென முடிவு செய்தோம்.'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்