கேரள வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப்பெண்ணை பாதுகாப்பாக மீட்ட விமானப்படை வீரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஆங்கிலத்தில் வெள்ளை பெயிண்ட்டால் தேங்ஸ் (நன்றி) என்று எழுதி கேரள மக்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 10 நாட்களாக மழை பெய்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். இந்நிலையில், மீட்புப் பணிக்காக முப்படையினரும், பேரிடர் மீட்புப் பணியிரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன், விமானப்படையினர் மீட்புப்பணியில் இருந்தனர். அப்போது, ஆலுவா நகரம் அருகே, செங்கமநாடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. அங்குள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நிறைமாத கர்ப்பிணியான சஜிதா பபில் உதவிக்காகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.
ஹெலிகாப்டரில் மீட்புப் பணிக்காகச் சென்ற கடற்படையினர் இதைப் பார்த்தனர். உடனடியாக மீட்புப் படையினர் அந்தப் பெண்ணை மீட்கும் பணியில் இறங்கினார். ஆனால், அந்த வீட்டில் மாடியில் இறங்கிய பின்புதான் அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணி என்பதும், பனிக்குடம் உடைந்தநிலையில் தவித்து வந்தார் என்பதும் தெரியவந்தது.
அந்தப் பெண்ணை பாதுகாப்பாகக் கடற்படை வீரர் விஜய் வர்மா மீட்டார். அந்த வீட்டில் இருந்த மற்றொரு பெண்ணையும் மீட்டனர். அதன்பின் சஜிதா பபில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சஞ்சீவானி கடற்படை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அந்த வீட்டில் உள்ளவர்கள் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில், வெள்ளை பெயிண்ட்டால் ஆங்கிலத்தில் தேங்ஸ் (நன்றி) என்று எழுதி தங்களின் நன்றியைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்திய விமானப்படையினர் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், கர்ப்பிணிப் பெண்ணையும் மற்றொரு பெண்ணையும் மீட்ட கமாண்டர் விஜய் சர்மாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த வீட்டின் மொட்டை மாடியில் தேங்ஸ் என்று எழுதப்பட்டுள்ளது நெகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago