பாஜகவின் ‘லவ் ஜிகாத்’ அகிலேஷ் கிண்டல்

பாஜக குறிப்பிடும் ‘லவ் ஜிகாத்’, அக்கட்சி எம்.பி. ஹேமமாலினி நடித்த படத்தை குறிப்பிடுவதாக இருக்கலாம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

முஸ்லிம் அல்லாத பிற மதத்தைச் சேர்ந்த இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்துவதன் மூலம் அவர்கள் முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்படுவதாக சில இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இதற்கு ‘லவ் ஜிகாத்’ என்ற வார்த்தையை இவை பயன்படுத்துகின்றன.

இந்நிலையில் உ.பி.யில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில பாஜக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் பேசும்போது, ‘லவ் ஜிகாத்’துக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். இப்பிரச்சினையை மாநில அரசு ஏன் கண்டுகொள்ள மறுக்கிறது? பெரும்பான்மை சமூக பெண்களை மதம் மாற்றுவதற்கு அவர்கள் உரிமம் பெற்றுவிட்டார்களா என்ன?’’ என்று பேசினார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவிடம் நிருபர் கேட்டதற்கு, “இதுபோன்ற கருத்துடன் வரும் படங்களில் நடிப்பதற்கு ஹேமமாலினி தயங்குவதில்லை. அவரது தர்மாத்மா படத்தில் இந்த உறவு சித்திரிக்கப்பட்டுள்ளது அல்லவா?” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்