ஆந்திராவில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பியதால் அவற்றிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால்தாழ்வான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை நடத்தினார்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம், மேற்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் பல ஏக்கர் பயிர்கள் நாசமாகி உள்ளன. இங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியதால், மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த மழை காரணமாக கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து தெலங்கானா மாநிலத்துக்கு செல்லும் சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பல ஏக்கர் பயிர்கள் நாசமாகி உள்ளன. இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று காலையில் டெலிகான்பரன்ஸ் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: பலத்த மழை, வெள்ளம் காரணமாக கேரளா மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்துக்கு உதவ நாமும் நிவாரண நிதி உதவி செய்ததோடு, மீட்பு பணிகளுக்காக தீயணைப்பு படையினரையும் அங்கு அனுப்பி வைத்துள்ளோம். தேவைப்பட்டால் மேலும் உதவிகள் செய்ய ஆந்திர அரசு தயாராக உள்ளது என்பதையும் கேரள அரசுக்கு தெரிவித்துள்ளோம்.
இந்நிலையில், நம் மாநிலத்தில், கடந்த 3 நாட்களாக பெய்துவரும் பலத்த மழைக்கு விவசாயிகள் தங்களது பயிர்களை இழந்துள்ளனர். கிருஷ்ணா, பிரகாசம், குண்டூர், கோதாவரி மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பியதால், தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், அணைகளுக்கு அருகில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இதில் உயிர் சேதமோ, பொருட்சேதமோ அதிகம் ஏற்படாமல் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். வருவாய், தீயணைப்பு, போலீஸ் துறையில் விடுப்பில் சென்றவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
கிழக்கு கோதாவரி மாவட்டம், தவளேஸ்வரத்தில் உள்ள காட்டம் அணைக்கட்டு தனது முழு கொள்ளளவை நேற்று எட்டியதை தொடர்ந்து, இதிலிருந்து தண்ணீர்
வெளியேற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் 2-ம் எண் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதே போல, பிரசித்தி பெற்ற விஜவாடா கனக துர்க்கையம்மன் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் கனமழை காரணமாக நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் வாகனப் போக்குவரத்து இல்லாத காரணத்தினால், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசைலம் அணையும் நிரம்பியதால்அதன் 5 மதகுகள் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால்,தாழ்வான பகுதிகளில் வசித்து வந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago