திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு, அரசியல் துறைக்கு மட்டுமல்லாது, கலைத்துறைக்கும் பேரிழப்பாகும் என பிரபல தெலுங்கு நடிகரும், எம்எல்ஏவு மான பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியலின் மூத்த அரசியல்வாதியையும், கலை ஞரையும் நாம் இழந்து விட்டோம் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் கனக்கிறது. அவரது மரணம், அரசியல் துறைக்கு மட்டுமல்ல, இந்திய கலைத்துறைக் கும் பேரிழப்பாகும். எனது தந்தை என்.டி.ராமாராவுடன் கலைஞ ருக்கு நெருங்கிய நட்பு உண்டு. அவரது 94 வயதில், 80 வருட அரசியல் அனுபவம், இதில் 5 முறை ஒரு மாநிலத்தின் முதல்வர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் என்பது சாதாரண விஷயம் அல்ல. இது ஒரு சாதனை.
இதுபோன்ற அரசியல் பீஷ்மர், தற்போது நம்முடன் இல்லை என்பதை நினைக்கும் போது மனம் வலிக்கிறது. அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப இய லாது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், திமுக நிர் வாகிகள், தொண்டர்கள், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நடிகர் பால கிருஷ்ணா கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago