கேரள முதல்வருடன் வெள்ள நிலைமை குறித்து பிரதமர் பேச்சு

By ஏஎன்ஐ

கேரளாவில் வெள்ள நிலவரம் குறித்து முதல்வர் பினராயி விஜயனுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழன்) காலை தொலைபேசியில் கலந்துரையாடினார். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில்  பாதுகாப்பு அமைச்சகம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் இன்று காலை மீண்டும் தொலைபேசியில் பேசினேன். நாங்கள் கேரளாவில் மழைவெள்ள நிலவரம் குறித்து விரிவாகப் பேசினோம்.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில்  பாதுகாப்பு அமைச்சகம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கும் என கேரள முதல்வரிடம் உறுதியளித்துள்ளேன். கேரள மக்களின் பாதுகாப்புக்கும் நல்வாழ்வுக்கும் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இப்பேரழிவு சம்பவங்களினால், அங்கு இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொச்சி மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளாவிலிருந்து தமிழகம், கர்நாடகாவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் கொச்சி விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வரும் சனிக்கிழமை வரை விமான நிலையம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்