வெள்ளத்தில் சிக்கித் தவித்த கேரள மாநில மக்களுக்காக தெலங்கானா அரசு சார்பில் நேற்று 500 டன் அரிசி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
கன மழை மற்றும் பெரு வெள்ளத்தில் சிக்கிய கேரள மாநில மக்களுக்காக, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், அரசு சார்பில் ரூ. 25 கோடி நிவாரண நிதி அனுப்பினார். மேலும் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமும், 20 டன் பால் பவுடர், 100 டன் சத்துணவு போன்றவை அனுப்பி வைக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களுக்காக மேலும் உதவிகள் செய்ய தெலங்கானா அரசு தயாராக இருப்பதாகவும் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார்.
கேரளாவில் வெள்ள நீர் வற்றி வருவதால், அவர்களுக்கு தேவையான அரிசியை அனுப்ப தெலங்கானா அரசு முடிவு செய்தது. அதன்படி, நேற்று 18 லாரிகள் மூலம் 500 டன் அரிசி மூட்டைகளை நிதி அமைச்சர் ஈதல ராஜேந்தர் அனுப்பி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: இயற்கையின் சீற்றத்தால் கேரள மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் கேரளாவிற்கு மனிதாபிமானமே மிக முக்கியம்.
தானியங்கள் அழிந்து, வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டுள்ள நிலையில், அவர்களின் பசியை போக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். ஆதலால், 500 டன் அரிசி கேரளா விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. இவை, கேரள முதல்வரின் உத்தரவின்படி, தானிய குடோன் களில் வைக்கப்பட்டு, அதன் பின்னர் பொதுமக்களுக்கு விநி யோகம் செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago