பிஹார் மாநிலத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து சொல்ல மஹுவாவுக்கு வருகை தந்த பிஹார் முன்னாள் முதல்வர் லாலுவின் மகனும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநிலத் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ்வை நெருங்கிய ஆயுதம் ஏந்திய நபர் பிடிபட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தேஜ் பிரதாப் யாதவ் தெரிவிக்கையில், ''நான் மஹுவாவுக்குச் சென்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்கு ஈத் அல் அதாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு நபர் அருகே நெருங்கிவந்து என் கையைப் பிடித்துக்கொண்டார். அவரின் கையில் கத்தி இருந்தது. நான் விலகிச்செல்ல முயன்றபோதும் என்னை விட்டுவிடாமல் இறுகப் பிடித்துக்கொண்டார். பிறகு மக்கள் அந்நபரை அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் என்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளது என்பதை அம்பலமாக்கியுள்ளது.
மஹுவாவில் மக்கள் கூட்டத்திடையே அந்நபரை யாதவின் எனது வாகன ஓட்டுநர்தான் அடையாளம் கண்டார். அந்நபரைப் பற்றி ஓட்டுநரும் மற்றவர்களும் எச்சரிக்கை ஒலி எழுப்பினர். அதற்குள் அவர் என்னை நெருங்கிவிட்டார். பின்னர் அவர் காவலரிடம் ஒப்படைக்கப்பட்டார். எனினும் அந்த நபரை போலீஸார் கைது செய்யவில்லை.
இங்கே எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு இல்லையெனில் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக வாழ முடியும்?'' என்று தேஜ் பிரதாப் யாதவ் கேள்வி எழுப்பினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago