கையில் மருதாணி வைத்துச் சென்ற பெண்கள் சிலரை வகுப்பறைக்குள் நுழைவதற்குத் தடை விதித்த தனியார் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களின் கோபத்தை அடுத்து மன்னிப்பு கோரியுள்ளது.
இச்சம்பவம் குஜராத் மாநிலம் பாருக்கில் கிறிஸ்தவ அறக்கட்டளை ஒன்று நடத்திவரும் குயின் ஆப் ஏஞ்சல் கான்வென்ட் பள்ளியில் நடைபெற்றது.
இதுகுறித்து பள்ளியின் நிர்வாகி சகோதரி ஷீலா செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தச் சம்பவம் இனி ஒருமுறை நடக்காது. எங்கள் பள்ளியில் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுகிறோம். மதத்தின் அடிப்படையில் மாணவர்களைப் பாகுபடுத்தும் நடைமுறை இங்கு இல்லை. ஆரம்பத்தில் இருந்தே எங்கள் பள்ளியில் இந்த விதிமுறை பின்பற்றப்பட்டுள்ளது. நாங்கள் யாரையும் இடைநீக்கம் செய்யவில்லை. இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
கைகளில் மருதாணி இட்டுக்கொண்டு சில மாணவிகள் வந்தபோது அவர்கள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டடதற்கு எதிர்ப்பு தெரிவித்ததில் பெற்றோருடன் உள்ளூர் இந்து அமைப்பினரும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago