ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.
இதுகுறித்து ஏஎன்ஐயிடம் அவர் தெரிவிக்கையில், ''இச்சட்டம் பெண்களுக்கும் கூட எதிரானது. இந்த சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்கள், தீவிரவாத சக்திகளின் தூண்டுதலில் செயல்படுவது தெளிவாக தெரிகிறது. பாகிஸ்தான் எந்த மாற்றத்தையும் அனுமதிக்காது.
இந்த 35ஏ சட்டப்பிரிவு என்பது பெண்களுக்கு முற்றிலும் எதிரானது. அது மட்டுமில்லை, அரசியலமைப்புக்கும் எதிரானது. எனவே இதை உச்சநீதிமன்றமே ரத்துசெய்வதை பார்க்கத்தான் போகிறோம். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இச்சட்டத்தை ரத்து செய்வதற்கோ அல்லது நீர்த்துப்போகும்படி செய்வதற்கோ, ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும்தான் 35ஏ சட்டப்பிரிவை நீக்குவது ஒரு பிரச்சினையாக உள்ளது’’ என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை சட்டப் பிரிவு 370 வழங்குகிறது, அதேநேரம் 35-வது பிரிவு ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் மக்கள், இம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ, நிரந்தரமாக குடியேறவோ அல்லது அரசாங்க அரசாங்க வேலைகள் பெறவோ அனுமதி மறுக்கிறது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago