திருப்பதி ஏழுமலையான் கோயில் மகா சம்ப்ரோக் ஷணம் இன்று நடைபெறுகிறது.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிகளின்படி, அஷ்டபந்தன பாலாலய மகா சம்ப்ரோக் ஷணம் (கும்பாபிஷேகம்) நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2006-க்கு பிறகு தற்போது இவ்விழா நடை பெறுகிறது. கடந்த 11-ம் தேதி அங்குரார்ப்பண நிகழ்ச்சியுடன் சம்ப்ரோக் ஷண விழா தொடங் கியது. இதில் 4-ம் நாளான நேற்று, மகா சாந்தி பூரணாஹுதி மற்றும் மகா சாந்தி திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படு வது வழக்கம். ஆனால் சம்ப்ரோக் ஷண விழாவையொட்டி நேற்று மாலை மகா சாந்தி திருமஞ்சனம் மூலம் மூலவருக்கு 14 வெள்ளிக் குடங்களில் அபிஷேகம் நடத் தப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து துணை கோயில்களி லும் மகா சாந்தி திருமஞ்சன சேவை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை மகா சம்ரோக் ஷணம் நடைபெறு கிறது. இரவு, பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்தியான தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். பின்னர் கருட பஞ்சமியையொட்டி, இன்று இரவு கருட வாகனத்திலும் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். இத்துடன் சம்ப்ரோக் ஷண விழா நிறைவடைவதால் நாளை (ஆகஸ்ட் 17) முதல் காலை 6 மணி முதல் பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago