அசாம் வெள்ளத்தால் 12 லட்சம் பேர் பாதிப்பு: 2,093 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன

அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக 16 மாவட்டங் களைச் சேர்ந்த 2,093 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

அசாமில் கடந்த சில வாரங் களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரம்மபுத்ரா மற்றும் அதன் துணை ஆறுகள் உள்பட பல ஆறுகளில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. ஆற்றின் கரையோரங்களைச் சேர்ந்த 16 மாவட்டங்களுக்குட்பட்ட 2,093 கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்த கிராமங் களைச் சேர்ந்த 12,65,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதிக அளவில் வெள்ள பாதிப்புள்ள பகுதி களைச் சேர்ந்த 1,63,052 பேர் 212 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு தேவையான அத்தியா வசிய பொருட்கள் வழங்கப் படுகின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக, இதுவரை 10 பேர் உயிரி ழந்துள்ளனர். 1,12,635 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன.

அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ள மோரிகான், பார்பெடா காமரூப், நல்பாரி, தேமாஜி, தின்சுகியா, சோனித்பூர் மாவட்டங் களில் தேசிய பேரிடர் மீட்புப் படையும் மாநில பேரிடர் மீட்புப் படையும் இணைந்து, 100 படகு களின் உதவியுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற் கொண்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்