பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டு ஐந்தாண்டுகள் கடந்துள்ள நிலையில், இறந்தவரின் குடும்பம் நீதிக்காக இன்னமும் காத்திருக்கிறது.
இக்கொலை வழக்கில் விரைவான நீதியை பெறும் முயற்சியில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர உதவுவதை உறுதி செய்யும்விதமாக, ''Jawab Do''("ஜவாப் செய்யுங்கள்") என்ற பெயரில் என்று தபோல்கரின் உறவினர் ஒரு ஆன்லைன் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
பகுத்தறிவு ஆர்வலர்களும் இப்பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் பல்வேறு சமூக ஊடக தளங்களில் #JawabDo and #WhokilledDabholkar ஆகிய ஹேஸ்டேக்குகளில் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டு, அக்டோபர் 20, புனேயில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் நடத்திய க்குதலில் தபோல்கர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ நடத்திவரும் விசாரணையை மும்பை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. எனினும் நீதிமன்றம் எத்தனையோ காலக்கெடுவை நிர்ணயித்தும் எச்சரிக்கைகள் விடுத்தும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
2013 -ல் தபோல்கர் படுகொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மற்றொரு பகுத்தறிவாளரான எம்.எம். கல்பர்கி கர்நாடகத்தின் தார்வாட் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டார்.
இருவரது படுகொலையிலும் ஒற்றுமை இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தபோல்கரைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட அதே ஆயுதத்தையே கல்புர்கி கொலையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago