திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்ற 1500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு பெய்யும் கனமழை, மோசமான வானிலை காரணமாக பாதிவழியில் சி்க்கித்தவித்து வருகின்றனர். 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆண்டுதோறும் திபெத் சீனா எல்லைப்பகுதியில் உள்ள கைலாஷ் மானசரோவர் புனிதத் தலத்துக்கு பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.
அதேபோல இந்த முறையும் ஏராளமான பக்தர்கள் யாத்திரை சென்றனர். ஆனால், நேபாளம், திபெத் பகுதியில் பெய்துவரும் கனமழை, மோசமான வானிலை காரணமாக ஏராளமான பயணிகள் பாதி வழியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இதில் 1500 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 100 பக்தர்கள் நேபாளத்தின் சிம்காட் பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ட்விட்டரில் கூறுகையில், ''மானசரோவர் யாத்திரை சென்று அங்கு பாதி வழியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன்.
சிம்காட் பகுதியில் 525 பக்தர்களும், ஹில்சா பகுதியில் 500 இந்தியர்களும், திபெத் மலைப்பகுதியில் 500 இந்தியர்களும் சிக்கி இருக்கிறார்கள். நேபாள அரசுடன் மத்திய அரசு பேசி வருகிறது. அவர்களின் ஹெலிகாப்டர் உதவியுடன் இந்தியர்கள் மீட்கப்பட உள்ளனர்.
இதுவரை 104 பக்தர்கள் மீட்கப்பட்டு நேபாள்காஞ் பகுதியில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே யாத்திரை சென்ற பக்தர்களில் நாராயண் லீலா (வயது 56), ஆந்திராவைச் சேர்ந்த சத்திய லட்சுமி ஆகியோர் இறந்துவிட்டதாக நேபாள போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மானசரோவருக்கு செல்லும் இடத்தில் பாதிவழியில் சிக்கி இருக்கும் இந்தியர்களுக்கு போதுமான மருத்துவ உதவிகளைச் செய்யுமாறு நேபாள அரசிடம் இந்தியத் தூதரகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சிம்காட், ஹில்சா, திபெத் மலைப்பகுதியில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க மாற்று வழியில் செல்ல நேபாள மீட்புப் படையினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்து வருகின்றனர். சிம்காட்-சூராகேட், சிம்காட்-ஜும்லா, சிம்காட்-முகு பகுதிகளில் வழியாகச் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
உதவி எண்கள்
மேலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களை மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர். முருகன் என்பவரை +977 98085006 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கர்நாடக மாநிலத்தவர்கள் யோகானந்தா +977 9823672371 , ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் பிந்தி நரேஷ் +977 9808082292 , கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித் +977 9808500644 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago