அசாம் அரசு வேலை நியமன முறைகேட்டில் எம்.பி. மகள் கைது: ஊழலைத் தடுக்கத் தவறியதாக பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம்

By ஏஎன்ஐ

அசாம் அரசுப் பணியாளர் தேர்வாணைய வேலை நியமனத்தில் நடந்துள்ள மாபெரும் ஊழலில் பாஜக எம்.பி.யின் மகள் ஒருவருக்கு முக்கியத் தொடர்பு இருப்பது வெட்கக்கேடாது, ஊழலைத் தடுக்கத் தவறியது கண்டனத்திற்குரியது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக எம்.பி. ஒருவரின் மகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த சந்தீப் தீக்ஷித் ஏஎன்ஐயிடம் தெரிவித்ததாவது:

''அசாம் அரசுப் பணியாளர் தேர்வாணைய வேலை நியமனத்தில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் மோசடியில் தொடர்புள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பாஜக எம்.பி. ஆர்பி ஷர்மா மற்றும் 18 அரசு உயரதிகாரிகள் நேற்று (ஜூலை 18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆளும் கட்சியியினரே அரசு வேலை நியமனத்தில் ஊழலுக்குத் துணைபோயிருக்கிறார்கள். வேலை நியமனத்தில் ஊழலைத் தடுக்கத் தவறியிருப்பது கண்டனத்திற்குரியது. ஆளும் பாஜக எம்.பி. மகள் கைது செய்யப்பட்டிருப்பது வெட்கக்கேடானது.

மத்தியில், அண்மைய ஆண்டுகளில் எந்தவிதப் பொருளாதார வளர்ச்சியும் இல்லை. ஒன்றைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து தேக்க நிலையில் உள்ளது தெரியவரும். அதில்தான் என்றில்லை. மார்க்கெட் துறையிலும் வேலை வாய்ப்புக்கான சதவீதம்  பெருமளவில் குறைந்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைகள் வழங்குவதில் ஊழல் இல்லாத பாதையை உருவாக்கவும் மோடி அரசு தவறியது மிகப்பெரிய சோகம்.''

இவ்வாறு சந்தீப் தீக்ஷித் தெரிவித்தார்.

63 பேர் கைது

இதுகுறித்து திப்ரூகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரஜ் சிங் பனேசர் கூறுகையில், ''அசாம் தேர்வாணைய பணிநியமன ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இன்று, 8 பெண் அதிகாரிகள் உள்ளிட்ட, 19 உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் இதுவரை 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.

இது தவிர, அசாம் போலீஸ் சர்வீஸ் கமிஷனில் 2015 நியமனத்தில் ஊழல் புரிந்ததாக 25 உயரதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே போலீஸ் வேலைக்காக தேர்வு எழுதியர்வளிடம் பணம் பெற்று விடைத்தாள்களில் திருத்தம் செய்வதற்கு உடந்தையாயிருந்தவர்கள்.

மேலும் அந்த 25 உயரதிகாரிகளில் 13 பேர் அசாம் சிவில் சர்வீஸஸ் தேர்வுக்காகவும், 7 பேர் அசாம் போலீஸ் சர்வீஸ் நியமனத்திற்காகவும், மீதியுள்ளவர்கள் சிவில் சேவைக்கு இணையான அரசுப் பணி நியமனத்திற்காகவும் மோசடியில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்