திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று கோயில் ஆழ்வார் திருமஞ்சன சேவை எனும் கோயிலை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் காரணமாக பகல் 12 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வருடாந்திர முக்கிய சேவைகளான வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், உகாதி திருநாள் ஆகியவற்றுக்கு முந்தைய செவ்வாய்க் கிழமை, ஆகம விதிகளின்படி கோயிலை வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியே ‘கோயில் ஆழ்வார் திருமஞ்சன சேவை’ என்று அழைக்கப்படுகிறது. தற்போது, வரும் 17-ம் தேதி இந்த ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியையொட்டி, நேற்று காலை கோயிலில் பன்னீர், சந்தனம், குங்குமம், மஞ்சள், பச்சை கற்பூரம் மற்றும் பல வாசனை திரவியங்களால் கர்ப்பக்கிரகம், கொடிமரம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், பெரிய ஜீயர், சின்ன ஜீயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை முன்னிட்டு, நேற்று பகல் 12 மணிக்கு பிறகே பக்தர்கள் சர்வ தரிசனம் முறையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், நேற்று காலை நடைபெற இருந்த அஷ்டதள பாத பத்மாராதனை சேவை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago