ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அடுத்த மாதம் 7-ம் தேதி வரை முன்ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோர் மீது சிபிஐ புதிய குற்றப்பத்திரிகையை கடந்த 19-ம் தேதி தாக்கல் செய்தது. இதில், ப.சிதம்பரம் மீதும் கார்த்தி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன.
ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்தபோது, மேக்சிஸ் நிறுவனத் தின் துணை நிறுவனமான குளோ பல் கம்யூனிகேஷன் சர்வீஸஸ் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத் துக்கு விதிகளை மீறி வெளிநாட்டு முதலீட்டுக்கான அனுமதியை வழங் கினார் என்பது சிபிஐ தெரிவித்துள்ள குற்றச்சாட்டு. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்ச ரவை குழு மட்டுமே அனுமதி அளிக்க முடியும்.
அதேபோன்று, மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நிதித்துறையின் ஒப்புதலைப் பெற்றுள்ளார் என்றும் சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது. நிதியமைச்சகம் ரூ.4.62 கோடிக்கான முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்த நிலையில் ரூ.305 கோடிக்கு முதலீடு பெற்றது என்பதும் ஒரு குற்றச்சாட்டாகும். விண்ணப்பத்தில் 10 ரூபாய் என்று உள்ள பங்கின் விலையை ரூ.800 என்று கூடுதலாக காட்டியதன் மூலம் இந்த தொகைக்கு முதலீடு பெற்றதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை வரும் 31-ம் தேதி விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ப.சிதம்பரம் தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படி கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார்.
வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. ஜூலை 23 முதல் 31-ம் தேதி வரை பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வர அனுமதி அளிக்கும்படி கார்த்தி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எதிர்தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கடந்த முறை அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து, கார்த்தி வெளிநாடு செல்ல ஏற் கெனவே விதிக்கப்பட்ட நிபந்தனை களுடன் அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
33 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago