சத்தீஸ்கர் மாநில அரசு நலத் திட்ட விழாவில் மாநில முதல்வர் ரமன் சிங்குடன் தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத்தும் கலந்துகொண்டு சஞ்சார் க்ராந்தி யோஜ்னா திட்டத்தை தொடங்கிவைத்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் திங்கள் அன்று சஞ்சார் க்ராந்தி யோஜ்னா திட்டத்தின்கீழ் ''மொபைல் திஹார்'' எனப்படும் புதிய நலத்திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்ட மாநில முதல்வர் ராமன் சிங் பேசுகையில், ''நெட்வொர்க் இணைப்பு அதிகரிக்கும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும்.இளைஞர்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் அதிகாரத்தைப் பெற வேண்டும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் 556 செல்போன் கோபுரங்கள் அமைப்பட உள்ளன.
கிராமங்களில் உள்ள உழைக்கும் மக்கள் 4ஜி ஸ்மார்ட்போன்களை பெறும் காலம் விரைவில் வரப்போகிறது. மக்கள் நமது மாநிலத்தை ஸ்மார்ட் சத்தீஸ்கர் என்று அழைக்கப் போகிறார்கள்'' என்றார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத்தும் கலந்துகொண்டார். விழாவில் அவர் ஸ்மார்ட்போன்களை பயனாளிகளுக்கு விநியோகித்தார்.
நேற்று முன்தினம், ''நாட்டின் மிகச்சிறந்த தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். நாட்டை முன்னேற்ற அடுத்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று அவரே பிரதமராக வரவேண்டும்'' என்று அரசியல் ரீதியாக, கங்கனா ரணாவத் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago