தன்பாலின உறவு குற்றம் என்ற 377-வது பிரிவை நீக்கிவிட்டால் சமூகத்தின் பாரபட்ச பார்வை நீங்கிவிடும்: வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கருத்து

By எம்.சண்முகம்

தன்பாலின உறவு குற்றமில்லை என்று முடிவெடுத்தால் அவர்கள் மீதான சமூகத்தின் பாரபட்சமான பார்வை நீங்கிவிடும் என்று உச்ச நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதிகள் தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்.

ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்த இருவர் உடல்ரீதியான உறவு கொள்வது சட்டப்படி குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ல் கூறப்பட்டுள்ளது. இப்பிரிவு சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் மூன்றாவது நாள் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் மற்றும் வழக்கறிஞர் மேனகா குருசாமி ஆகியோர் வாதிட்டதாவது:

தன்பாலின உறவு வைத்திருப்பவர்கள் நாட்டின் மற்ற குடிமகன்களுக்கு வழங்கப்படும் சலுகை, உரிமைகளைப் பெற தகுதியற்றவர்கள் என்று சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அவர்களது உரிமைகளைத் தடுக்கும் எந்த அரசு உத்தரவும், விதிமுறைகளும் எங்குமே இல்லை. இந்திய சமூகத்தில் அவர்கள் மீதான பார்வை தவறான வகையில் ஆழமாகப் பதிந்து விட்டது. இதனால், அனைத்து இடங்களிலும் அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது. பிரிவு 377 சட்டப்படி செல்லாது என்று அறிவிப்பதால் மட்டுமே அவர்கள் மீதான பாரபட்சம் நீங்கிவிடாது. சமூகத்தால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் நீங்க வேண்டும்.

மனநல பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மருத்துவ சலுகைகளைக் கூட தன்பாலின உறவில் இருப்பவர்களால் பெற முடியவில்லை. இத்தகைய உறவில் இருப்பவர்களை பாரபட்சமாக நடத்தக் கூடாது என்று இச்சட்டம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர்கள் வாதத்தை முன்வைத்தனர்.

சிகிச்சை பெற முடியாத நிலை

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 சட்டப்படி செல்லாது என்று அறிவித்தாலே, தன்பாலின உறவில் இருப்பவர்கள் மீதான அனைத்து பாரபட்சமும் நீங்கிவிடும். அவர்களை குற்றவாளிகளைப் போல் பார்க்கும் சமூகத்தின் பார்வையும் மாறிவிடும். சமூகத்தின் பாரபட்சம் காரணமாக அவர்களால் மருத்துவ சிகிச்சை கூட பெற முடியவில்லை. மருத்துவர்களும் அவர்களைப் பற்றிய ரகசியத்தை பாதுகாப்பதில்லை என்ற நிலை வேதனையளிக்கிறது’ என்று தெரிவித் தனர்.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, ‘தன்பாலின உறவில் இருப்பவர்களைக் குற்றவாளிகளாக சித்தரிக்கும் பிரிவு 377 நீக்கப்பட்டால், அவர்களுக்கு ஏற்படும் தொடர் பாதிப்புகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும். அரசு வேலையில் சேருவது, தேர்தலில் போட்டியிடுவது, சங்கங்கள் தொடங்குவது போன்றவற்றிற்கு உள்ள தடை நீங்கும்’ என்று அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டிருந்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்து தன்பாலின உறவாளர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந் துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்