நக்சல் தலைவர் கணபதியின் தலைக்கு ஒரு கோடி ரூபாய்: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

நக்சல் தலைவர் கணபதியைப் பற்றி பொதுமக்களில் யாரேனும் முக்கியமான தகவல்களைக் கொடுத்தால் அவர்களுக்கு அரசு சார்பாக ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

சுமார் 9 மாநிலங்களில் நக்சல் நடவடிக்கைகள் சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) கட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அக்கட்சியின் தலைவராக இருப்பவர் கணபதி (65). இவரின் இயற்பெயர் முப்பல லஷ்மண் ராவ் என்பதாகும். இவரின் தலைக்கு ரூ.1 கோடி என விவை நிர்ணயித்துள்ளது மகாராஷ்டிரா அரசு. நாட்டில் மிக முக்கியமாகத் தேடப்படும் நபர் இவர் ஆவார். இவரைப் பற்றித் தகவல் தருபவர்களுக்குச் சன்மானம் வழங்குவோம் என்று பல மாநிலங்களும் அறிவித்துள்ளன.

இவர் தவிர அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பதுங்கியிருக்கும் இடங்களைப் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு ரூ.60 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்களில் பலர் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஸா மற்றும் மகாராஷ்டிரா காடுகளில் ஒளிந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்