பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின்(டி.ஆர்.எஸ்) தலைவர் கே.சந்திரசேர ராவ் சேர முயல்ரும்புவதாக தெரிய வந்துள்ளது. இதற்காக அவர் பாஜக எதிர்ப்பு விமர்சனத்தை சமீப நாட்களாக கைவிட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து பிரிந்த புதிய மாநிலமான தெலுங்கானாவின் முதல் அமைச்சராக இருப்பவர் கே.சந்திரசேகர ராவ். தம் ஆட்சி அமைந்தது முதல் நான்கு வருடங்களாக ராவ் மத்திய அரசிற்கான ஆதரவு நிலை எடுத்து வந்தார். இதனிடையில், தம் மாநிலத்திற்கு கேட்ட நிதி கிடைக்காதமையால் பாஜக எதிர்ப்பு நிலையை எடுத்தார்.
இத்துடன், காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணி அமைய வேண்டும் என முதல் மாநிலக் கட்சி தலைவராகக் குரலும் கொடுத்தார். கடந்த மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற நித்தி ஆயோக் கூட்டத்திற்காக டெல்லி வந்திருந்தார் ராவ். அப்போது அவர் பாஜக எதிர்ப்பு மாநில முதல் அமைச்சர்களுடன் இணைந்து மதிய உணவிற்கு செல்லவில்லை. ராவுடன்து பிரதமர் நரேந்திர மோடி தனிமையில் பேசியிருந்தார்.
இதை தொடர்ந்து சந்திரசேகர ராவ் பாஜக எதிர்ப்பு நிலையை கைவிட்டிருக்கிறார். இதற்கு தம் குடும்பத்தினர் ராவிற்கு அளிக்கும் நெருக்கடியும் ஒரு காரணம். ராவின் அமைச்சரவையில் ராவின் மகனான ராமா ராவ் மற்றும் சகோதரியின் மகனான ஹரி பிரசாத் ஆகியோர் அமைச்சராக பதவி வகிக்கின்றனர். எனவே, தனது மகளான கே.கவிதாவை மத்திய அமைச்சராக்க ராவ் விரும்புகிறார்.
இது குறித்து ‘தமிழ் இந்து’விடம் டிஆர்எஸ் எம்பிக்கள் வட்டாரம் கூறும்போது, ‘மக்களவை தேர்தலுக்கு முன்பாக நம்
கட்சி பாஜகவுடன் சேரும் அல்லது ரகசிய உடன்படிக்கையில் தேர்தலில் போட்டியிடும். தெலுங்கானாவில் அதிகம் உள்ள முஸ்லீம் வாக்குகளுக்காக சற்று தயங்க வேண்டி உள்ளது.’ எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், டிஆர்எஸ் கட்சியுடனான கூட்டணிக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கூட்டணியால் பாஜகவின் வளர்ச்சி மாநிலங்களில் பாதிக்கும் எனக் காரணம் கூறுகின்றனர். அதேபோல், காங்கிரஸ் மற்றும் அசாசுத்தீன் உவைசியுடன் இணைந்தால் அதிக தொகுதிகள் பெறலாம் என ராவிடம் டிஆர்எஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
2019 மக்களவையுடன் சேர்த்து தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, ராவ் இணைந்தால் அவரது கட்சி தென்னிந்தியாவில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த முதல் ஆளும் கட்சியாக இருக்கும். இதன் மீதான இறுதி முடிவு என்னவாக இருந்தாலும் தற்போதைக்கு சந்திரசேகர ராவ் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டிருப்பது உண்மை.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago