சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம்: புகழேந்தியிடம் 2 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை

By இரா.வினோத்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சசிகலா கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெங்களூருவில் சிறையில் உள்ளார். கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, “சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்குவதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது” என புகார் கூறினார்.

இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள டிடிவி தினகரனின் ஆதரவாளரும், முன்னாள் அதிமுக செயலாளருமான‌ புகழேந்திக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது. இதன்படி புகழேந்தி பெங்களூருவில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேற்று காலை ஆஜரானார். அவரிடம் ஏடிஜிபி பாலராஜு விசாரணை நடத்தினார். அப்போது பல்வேறு கேள்விகளை பாலராஜு எழுப்பியதாக தெரிகிறது.

சுமார் 2 மணி நேரம் நடந்த விசாரணையில் புகழேந்தி தரப்பில், “இந்த புகாருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிமுக நிர்வாகியாக இருந்ததால் கட்சி தொடர்பாகவே சசிகலாவை சந்தித்தேன். சிறை விதிகளுக்கு உட்பட்டே சசிகலாவை சந்தித்தேன்” என விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. புகழேந்தியின் விளக்கத்தை பதிவு செய்த அதிகாரிகள், மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி அனுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்