நீதிமன்றங்களுக்கு மேல் முறையீடு செய்வதற்காக தொடக்கநிலை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வரி வழக்குகளில் 41 சதவீதம் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் 6ஆயிரம் மதிப்பிலான வரி வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அவர் கூறினார்.
வரி வழக்குகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி மத்திய அமைச்சர் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:
தீர்ப்பாயங்களிலும் நீதிமன்றங்களிலும் மேல்முறையீடு செய்வதற்கான ஆரம்பகட்ட வரித்தொகைகளுக்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 41 சதவீத வரி வழக்குகள் குறைக்கப்படவுள்ளது. வரி செலுத்துவோருக்கு ரூ .70,000 கோடி மதிப்பிலான வருமான வரி திருப்பியளிக்கப்பட்டுள்ளது.
நேர்மையான முறையில் வரிசெலுத்தவேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்களுக்காக வரிவிகிதங்களில் தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறது மத்திய அரசு.
வரிசெலுத்துவோரின் குறைகளை களைவதற்கும் வரிவிவகாரங்கள் தொடர்பான வழக்குகளைக் குறைக்கவும் தொழில்செய்வதை எளிதாக்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவ்வகையில், மேல் முறையீட்டு நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் கீழ் இருக்கக்கூடிய, துறைரீதியாக தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுக்களின் வரம்புகளை அதிகரிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இது நேரடி மற்றும் மறைமுக வரிகளை திறம்பட குறைக்கவும், சிறிய வழக்குகள் மற்றும் உயர் மதிப்பு வழக்குகள் கவனம் செலுத்த துறைகளுக்கு உதவுவும் வருமான வரி வழக்குகளின் அணுகுமுறையில் இது மிகப்பெரிய முயற்சியாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் 6 ஆயிரம் மதிப்பிலான வரிவழக்குகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது நேர்மையாக வரிசெலுத்துவோருக்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கை.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago