உத்தரபிரதேசத்தில் 2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழுத விவசாயி

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி தனது நிலத்தை உழுவதற்கு டிராக்டருக்கு பணம் இல்லாததால் தனது 2 மகள்களை ஏர் இழுக்க வைத்து நிலத்தை உழுதுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்ததும் விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனாலும் விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. ஜான்சி மாவட்டம் படாகான் கிராமத்தைச் சேர்ந்தவர் அச்சேலால் அஹர்வார். இவருக்கு 6 மகள்கள். 4 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. ரூ.1.5 லட்சம் கடன் உள்ளது.

வறுமையால் வாடும் இவரிடம் தனது நிலத்தை உழுவதற்காக மாடுகளை வாங்கவோ டிராக்டரை வாடகைக்கு எடுக்கவோ பணம் இல்லை. இதனால் ரவினா (13) மற்றும் ஷிவானி (10) ஆகிய 2 மகள்களை ஏரில் பூட்டி தினமும் நிலத்தை உழுது வருகிறார். இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கின்றனர். கோடை விடுமுறை என்பதால் இவர்களை நிலத்தை உழுவதற்கு பயன்படுத்திக் கொள்கிறார் அச்சேலால்.

இதுகுறித்து அச்சேலால் கூறும்போது, “பருவ மழை ஓரளவு பெய்துள்ளதாலும் மேலும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையிலும் நிலத்தை உழுது கொண்டிருக்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

48 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்