பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெறும் திருமணம் ஆகாத மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை பிஹார் அரசு செயல்படுத்தி வருகிறது.
பிஹாரில் ‘முதல் அமைச்சர் பெண்கள் மேம்பாட்டு திட்டம்’ கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி பெண் குழந்தைகளின் பிறப்பு முதல் பட்டப்படிப்பு முடியும் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் பிளஸ்-2 தேர்ச்சி பெறும் திருமணம் ஆகாத மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை அளிக்கப்படும். பிஹாரில் வரும் 6-ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. ரூ.10 ஆயிரம் உதவித்தொகை அளிப்பதற்காக பிளஸ்-2 வகுப்பில் தேர்வு பெற்ற திருமணம் ஆகாத மாணவிகள் பெயர் பட்டியலை தயாரிக்குமாறு மாவட்டங்களின் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘‘கல்வியை ஊக்குவிப்பது, குழந்தை திருமணத்தை தடுப்பது, பெண்களுக்கு கல்வியறிவு மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது ஆகியவற்றுக்காக திருமணம் ஆகாத பிளஸ்-2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. திருமணமானாலும் பட்டப்படிப்பு முடிக்கும் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்’’ என்று கல்வித்துறை செயலாளர் ஆர்.கே.மகாஜன் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago