தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அசாருதீன் போட்டி

By என்.மகேஷ் குமார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

வருகிற மக்களவைத் தேர்தலில் எனது சொந்த மாநிலமான தெலங்கானாவிலிருந்தே போட்டி யிடுமாறு எனது நெருங்கிய நண்பர்கள், ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, இந்த முறை, செகந்திராபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவேன் என அசாருதீன் தெரிவித்தார்.

இந்நிலையில், ஹைதரா பாத்தில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ஹைதராபாத் நகர காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில், அசாருதீனின் அறிவிப்புக்கு மூத்த காங்கிரஸ் நிர்வாகி அஞ்சன்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பின்னர், அவர் கூறியதாவது:

செகந்திராபாத் தொகுதிக்காக கடந்த 4 ஆண்டுகளாக கடுமை யாக உழைத்திருக்கிறோம். ஆனால், அந்தத் தொகுதியில் போட்டியிடப்போவதாக அசா ருதீன் அறிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. செகந்திராபாத் தொகுதியில் நான் தான் போட்டியிடுவேன். இவ்வாறு அஞ்சன் குமார் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்