சந்திர கிரகணம் நேற்று இரவு 11.54 மணிக்கு தொடங்கி, இன்று சனிக்கிழமை அதிகாலை 3.49 வரை நீடித்தது. இதனையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோயில்களும் நேற்று மதியம் முதலே மூடப்பட்டன. இதில், திருப்பதி ஏழுமலையான் கோயில் நேற்று மாலை 5 மணிக்கு மூடப்பட்டது. இக்கோயில் மீண்டும் இன்று காலை 4.15 மணிக்கு திறக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி, கோயில் சுத்தம் செய்யப்பட்ட பின்னர் 5 மணிக்கு பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஏழுமலையான் கோயில் மூடப்பட்டதால், திருமலையில் உள்ளபக்தர்கள் அருகே உள்ள தீர்த்தங்கள், சுற்றுலா தலங்களுக்குச் சென்று வருகின்றனர். இதே போன்று, திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜ பெருமாள் கோயில்,கோதண்டராமர் கோயில், கபிலேஸ்வரர் கோயில் உட்பட ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள அனைத்து கோயில்களும் நேற்று மாலை மூடப்பட்டன.
இக்கோயில்கள் அனைத்திலும் இன்று காலை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஆனால், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று மாலை முதலே மூலவருக்கு கிரகண கால அபிஷேகம் நடத்தப்பட்டது. விடிய, விடிய நடந்த இந்த அபிஷேகத்தில் பக்தர்கள் சுவாமியை வழிப்பட்டனர். பின்னர், கிரகணம் முடிந்ததும், கோயில் சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
39 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago