மதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி தேவையில்லை: டெல்லியில் புதிய கல்விமுறையைத் தொடங்கிவைத்து தலாய் லாமா பேச்சு

By ஐஏஎன்எஸ்

இயல்பறிவு மற்றும் விஞ்ஞான அறிவை அடிப்படையாகக் கொண்டு உலகில் கல்வி முறை இருக்க வேண்டுமே தவிர, மதத்தை அடிப்படையாகக் கொண்டு அல்ல என்று திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா பேசியுள்ளார்.

புதுடெல்லியில் இன்று காலை டெல்லி அரசின் 'மகிழ்ச்சியான பாடத்திட்டம்' நிகழ்வை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருடன் இணைந்து அவர் தொடங்கிவைத்தார்.

''இன்றைய உலகிற்கு தேவையானது என்னவென்றால் விழுமியங்கள் சார்ந்த கல்வியே தவிர, மதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி அல்ல. அதேநேரம் இயல்பறிவும் (common sense) விஞ்ஞான அறிவையும் அடிப்படையாகக் கொண்டு கல்வி இருக்க வேண்டும்.

நவீன கல்வி மற்றும் பழங்கால இந்திய அறிவு ஆகியவற்றை இணைத்து தரக்கூடிய ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. உலகில் உருவாகிவரும் அழிவு சிந்தனைகளைக் கையாள இக்கல்வி மிகவும் தேவைப்படுகிறது. எனவே டெல்லி பள்ளிகளில் தொடங்கப்படும் இக்கல்வி உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தியானம் மற்றும் மனப்பயிற்சியுடன் கூடிய இப்பாடத் திட்டம் மகிழ்ச்சியை பரப்பும் நல்ல மனிதர்களை உருவாக்கிட மட்டுமல்ல, பணியாளர்கள் ஊழலில் ஈடுபடுவதையும் தடுத்து நிறுத்தும்.

தினசரி 45 நிமிடம் நடைபெறும் மகிழ்ச்சிக்கான வகுப்பு மனவிழிப்புநிலைக்கான பயிற்சி, நன்றியுணர்வு, ஒழுக்கம் மற்றும் மதிப்பு அடிப்படையிலான கதைகள் மற்றும் செயல்முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது''

நன்றாகப் படிக்க குழந்தைகளுக்கு மகிழ்ச்சி முக்கியம்: சிசோடியா

கல்வித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரும் துணை முதல்வருமான சிசோடியா இதுகுறித்து கூறுகையில், ''எப்போதும் உற்சாகமாக இருக்கலாம். மகிழ்ச்சியின் அளவு மேம்படும். அதுமட்டுமின்றி மன அழுத்தங்கள், கவலை மற்றும் மனச்சோர்வுகள் அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும்,

கல்வித்திட்டத்தின் வளர்ச்சி என்பது எவ்வாறு அமையுமெனில் நல்ல மன ஆரோக்கியம், நடத்தை மற்றும் கண்ணோட்டம் ஆகியவற்றிற்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கக்கூடியதாக இருக்கும். சிறப்பாக வாழவும், மனதில் மகிழ்ச்சியை எப்போதும தக்கவைத்துக் கொள்வதையும் இது முன்னிலைப்படுத்தும்.

குழந்தையின் மனம் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது மிகமிக முக்கியமாகும். மகிழ்ச்சியான குழந்தைகளே நிறைய கற்கமுடியும். தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள மனதை வளமாக வைத்திருக்கவேண்டும்'' என்று சிசோடியா கூறினார்.

கிளர்க்குகளை உருவாக்கிய நமது கல்விமுறை: கேஜ்ரிவால்

நிகழ்வில் கலந்துகொண்டு கேஜ்ரிவால் பேசுகையில், ''இந்த நாள் நவீன கல்வி முறைக்கு முழுமையாக மாற்றம் பெறுவதற்கான மைல்கல். இதை 100-150 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருக்க வேண்டும்.

 கல்வியின் உண்மையான அர்த்தத்தை நாம் மறந்துவிட்டோம். நமது கல்வி முறை நல்ல மனிதர்களை உருவாக்காமல் கிளர்க்குகளை மட்டுமே உருவாக்கித் தந்திருக்கிறது'' என்றார்.

இப்பாடத்திட்டம் நர்சரி வகுப்பிலிருந்தே தொடங்கப்படுகிறது. எட்டாம் வகுப்புவரை இப்பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் 8 லட்சம் மாணவர்களின் வாழ்வை மேம்படுத்தும் பணிகளைச் செய்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்